தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் ஏலத்துக்கு வருகின்றன. யூகோ வங்கியில் பெற்ற ரூ.1.36 கோடி கடனைச் செலுத்தாததால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வருகின்றன.