ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் இந்திய முதல்வர்களின் சொத்து மதிப்பு அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, முதலிடத்திலுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், இரண்டாம் இடத்திலுள்ள அருணாசலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுக்கு 129 கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளன என்று அறிவிக்கப்பட்டது.