கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வர உள்ளார். வரும் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும் ட்ரூடேவ், இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 19-ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் செல்கிறார். பின்னர், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருடன் உரையாற்றுகிறார்.