மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் நடைபெற்ற சிவாலய ஓட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து முக்கிய சிவத் தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். குமரி மாவட்டத்தில் நடக்கும் சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.