ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் இன்று ஆஜரானார். அவர்  ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக விவேக் ஜெயராமனுக்குத் தெரிந்திருக்கும் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.