மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையதை பயங்கரவாதி என அறிவித்தது பாகிஸ்தான். முன்னதாக, இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதற்கு இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி மற்றும் ஆயுத உதவியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.