தாஜ்மஹால் இந்தியாவின் கட்டடக்கலைக்குச் சான்றாகவும் காதல் சின்னமாகவும் விளங்குகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தரும் சுற்றுலா தலமான தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்கான கட்டணம் ரூ. 40-லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தியுள்ளது அந்த மாநில அரசு. இந்த டிக்கெட் 3 மணி நேரம் பார்வையிடுவதுக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.