தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 -வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டைஇழந்ததால் 274 ரன்கள் மட்டுமே எடுத்தது.