கபினி அணையில் நீரைத் திறந்துவிட வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தை நோக்கி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்கின்றனர். அவர்கள், மன்னார்குடியில் கரிகால சோழனை வணங்கிவிட்டு பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.