விருதுநகர், ராஜபாளையம் பகுதி பேரூராட்சியில் இளங்கோ என்பவர் வீடு அப்ரூவல் பிளானுக்கு அனுமதிகோரியுள்ளார். அதற்கு, பில்கலெக்டர் காமராஜ் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இளங்கோ, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து, காமராஜிடம் ரசாயனம் தடவிய நோட்டுகள் வழங்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.