மதுரையில் பேசிய வைகோ, 'திராவிட அரசியலில் வளர்ந்தவன் நான். ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓய மாட்டேன். கருணாநிதிக்கும் எனக்கும் ஏற்பட்டது தகப்பன் மகனுக்குள் ஏற்பட்ட மோதல். கருணாநிதிக்கு எப்படி கவசமாக இருந்தேனோ, அதுபோல் ஸ்டாலினுக்கும் இருப்பேன். எந்தப் பதவியையும் தேடி இந்தக் கூட்டணிக்கு வரவில்லை' என்றார்.