தூத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைதுசெய்து விடுதலை செய்தது. பின்னர், போராட்டத்தை தூண்டியதாக எட்டுபேரை சிறையிலடைத்தது.