கடலூரில் பேசிய கனிமொழி, `பேருந்துக்கட்டண உயர்வின் மூலம் 38 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது வெறும் 28 கோடி ரூபாய்தான் வசூலாகிறது. இந்தக் கட்டண உயர்வால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை செல்லூர் ராஜுக்களைத் தாங்கிக்கொள்வது' என்றார்.