மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடு செய்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மக்கள் குவிந்துள்ளனர். மகாசிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் எத்தகைய பாவங்கள் செய்திருந்தாலும் விலகிப்போகும் என்பது ஐதிகம்.