சிரிக்க வைப்பதும் சிலிர்க்க வைப்பதும் மட்டும் காதல் கிடையாது. அன்புக்குரியவர்களின் பலவீனங்களையும் தோல்விகளையும் இயல்பையும் ஏற்றுக் கொண்டு பயணிப்பதுதான் காதல். எல்லா சூழலிலும் புரிதலும் நம்பிக்கையும் அணுவளவும் குறையக் கூடாது. `பொசசிவ்னஸ்’ ரசிக்கும்படி இருக்கலாம். ஆனால், அதுவே உறவை முறிக்கும் பேயாக மாறிவிடக் கூடாது!