நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே, மசினக்குடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில், இரண்டு பெண் குட்டிப் புலிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிறந்து இரண்டு மாதங்களே ஆன இந்தக் குட்டிகளின் தாய்புலி வெளியில் சென்ற நேரத்தில், மற்றொரு ஆண்புலி தாக்கி, இந்தக் குட்டிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.