சிவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று கோவை ஈஷா யோக மையத்துக்கு வந்துள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மத்திய அரசிடம் எங்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய நிதியைத்தான் கேட்கிறோம். ஆனால், நிதி கொடுக்காமல் மோடி எங்களுக்கு அல்வாதான் கொடுக்கிறார்' என்றார்.