காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 2 கோடி ரோஜாக்களை ஏற்றுமதி செய்து ஓசூர் விவசாயிகள் அசத்தியுள்ளனர். ஓசூர் ரோஜாக்களுக்கு உலகச் சந்தையில் கூடுதல் வரவேற்பு. இந்தியாவின் ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களில் 80%  ஓசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால் பலகோடி ரூபாய் அன்னிய செலாவணி பெறுவதாக ஓசூர் விவசாயிகள் பெருமை அடைகின்றனர்.