தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கான செலவினங்களில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘எங்கள் மாநிலத்தில் போதுமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. மோடி கேர் திட்டத்துக்காக மாநில வளங்களை வீணடிக்க முடியாது’ என்றார்.