காதலர் தினத்துக்காகக் கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாக்கியுள்ள பாடல் ‘உலவிரவு’ கௌதம் வாசுதேவ் மேனனின்  'ஒன்றாக’ யூடியூப் சேனலில் வெளியானது. இப்பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ளார்.