`ஒரு அடார் லவ்' படத்தின் ஒரே பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்நிலையில் பட தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷுக்கு எதிராக ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் `இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் அமைந்துள்ளது’ என முகமது அப்துல் முக்கித் என்பவர் புகார் அளித்துள்ளார்.