பிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தலைமை பிடிக்காததால் அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன், வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை' என தெரிவித்தார்.