சென்னையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும்  வழக்கறிஞர்களுடன் கமல் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் மக்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெறும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. நாளை தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிப் பெயரை பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாக தான் இந்த கூட்டம் நடைப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.