இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், நேற்று 4 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் , தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இலங்கையின் முரளீதரன், ஒரு தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.