தமிழகம் உள்ளிட்ட சில மாநிலத்தில் எய்ம்ஸ் கொண்டு வரப்படும் என்ற  அறிவிப்பு வெளியாகி பல நாள் ஆகியும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததால், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய ஏன் தாமதம் ஆகிறது’ என மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.