நாகாலாந்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க  வெற்றிக்கு தீவிரம் காட்டி வருகிறது. நாகாலாந்தில் 88 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள். அவர்களின் வாக்குகளைப் பெற  ஜெருசலேமுக்கு இலவசப் பயணம் அழைத்துப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பா.ஜ.க.