அஜித்குமார் மற்றும் சிவா நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்துக்கு இமான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது இமானின் 101 வது படமாகும். அதையடுத்து, இமானுக்கு அனிருத் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு, படத்தில் நீங்கள் பாட்டு பாட வேண்டும் என்று இமான் அனிருத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.