இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன. அடுத்தகட்டமாக, 5 ஜி சேவையை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் மற்றும் சீன நிறுவனம் ஹுவேய் இணைந்து வெற்றிகரமாக இந்தியாவில் 5 ஜி சேவையை சோதித்துப் பார்த்ததாக அறிவித்தது. ஒரு வினாடிக்கு 3 ஜிபி அளவிற்கு வேகம் இருந்துள்ளது.