நிலவில் முதல் முறையாக செல்போன் நெட்ஒர்க் அமைக்கப்படவுள்ளதாக பிரபல செல்போன் நிறுவனமான வோடபோன் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிலாவிலிருந்து நேரலையாக படங்களையும் விடியோக்களையும் பூமியில் காணமுடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த முயற்சியில் தொழில்நுட்ப பங்குதாரராக நோக்கியா நிறுவனமும் ஆடி கார் நிறுவனமும் செயல்படுகிறது .