ராமநாதபுரத்தில் பேசிய அய்யாக்கண்ணு, 'மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையென்றால் டெல்லியில் இம்மாதம் 29-ம் தேதி தூக்கில் தொங்கும் போராட்டத்தினை நடத்துவோம். கர்நாடகத்தில் தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது' என்றார்.