கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிப்பு.