அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பு 7,000 காலணிகளைப் பரப்பி வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இது, 2001-ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடந்தது. துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.