உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். சுந்தர் பிச்சை, `உலகம் சிறந்த விஞ்ஞானியை இழந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.