டெல்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அ.தி.மு.க எம்.பி-க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.