கர்நாடகாவில் சிவனை வழிபடுபவர்கள் லிங்காயத் பிரிவினர். தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, தங்களை தனிச் சிறுபான்மை மதமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று கர்நாடக அமைச்சரவை லிங்காயத் பிரிவினரை தனிமதமாக அங்கீகரித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.