சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா இன்று தொடங்கி, ஏப்ரல் 2-ம்தேதி வரை நடைபெறுகின்றது. கோலவிழி அம்மன் கோயிலில் கிராமதேவதை வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கொடியேற்றம், அதிகார நந்தி சேவையும், தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.