தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் பங்குனிப் உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 13 நாள்கள் நடைபெறுகிறது. இதே போல, நவதிருப்பதி தலங்களில் 9வது தலமும், குரு ஸ்தலமுமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலும் இன்று பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.