ரஷ்யாவின் கெமேரோவா நகரில்  நேற்று(ஞாயிறு) வணிக வளாகம் ஒன்றின் 4 வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை சுமார் 37 பேர் பலியாயினர். இந்த வணிக வளாகத்தில் செல்ல பிராணிகள் பூங்கா ஒன்றும் இருந்துள்ளது. இதில் இருந்த 200 க்கும் அதிகமான விலங்குகளும் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.