'இந்தியாவின் விலை குறைவான பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான CT 100 சீரிஸ் பைக்கின் விலையை, மேலும் 5,000 ரூபாய் குறைத்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்தப் புதிய விலைப் பட்டியலின் படி, கிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் கொண்ட CT 100 KS Alloy மாடலின் விலை, 37,235 ரூபாயில் இருந்து 32,442 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.