வரும் 29, 30-ம் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஆனால், 31-ம் தேதி விடுமுறை இல்லை. ஏப்ரல் 1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிக்கும் தினம். எனவே, அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால், பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது.