அரியலூர் மாவட்டம், திருமானூரிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயிலிலுள்ள நந்திக்கு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடக்கும் திருமண விழா இன்று நடைபெற்றது. சிவபெருமான முன்னின்று இந்த திருமண விழாவை நடத்துவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த விழாவைக் காண தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குவிந்தனர்.