தாய்லாந்தில் நேற்று இரவு மியான்மரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் டபுள் டக்கர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக தீப் பிடித்தது. இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  தாய்லாந்தில் கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய விபத்தாகும்.