பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நாளான இன்று பழநியில் தேரோட்டம் நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக, பல்வேறு விதமான காவடிகளுடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடிப்பாடியபடி மலையேறினார்கள். மேலும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.