மயிலாடுதுறையில் திருஇந்தளூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலில் திருத்தேர் பவனி நடைபெற்றது. இந்தத் தேரில் பரிமள ரங்கநாதர்- பரிமள ரங்கநாயகி எழுந்தருளிக் காட்சியளித்தனர். இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.