கன்னியாகுமரி மாவட்டதில் ஒரு கோயிலில்கூட தங்கத்தேர் இல்லை. இதையடுத்து பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு தங்கத்தேர் அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். தங்கத் தகடு பதிக்கும் பணிக்காக தங்கம் உருக்கும் நிகழ்ச்சி இன்று காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடந்தது.