கேப்டவுன் நகரில் தண்ணீரை பாதுகாப்பதற்காகக் காவலர்களை நியமித்துள்ளார்கள். உலகளவில் தண்ணீரைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிப்பது இதுவே முதல்முறை. கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் கேப்டவுன் நகரில் தண்ணீர் தொடர்பான பல்வேறு முறைகேடுகள், குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காகப் போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.