பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின்  முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று காலை வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்தார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுற்றி வந்தது தேர். முன்னதாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.