கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில், பங்குனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 13-ம் தேதி காலை நடைபெற உள்ளது. 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 15-ம் தேதி தெப்ப உற்சவத் திருவிழாவும் நடைபெறும்.