திருமாலின் மூன்றாவது அவதாரம், வராஹர் வடிவம். பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழியவும் அவதரித்தார். தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின் வேண்டுதலுக்காக அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்தார். வராஹ வடிவம்கொண்டு திருமால் பூமிக்கு வந்த இன்றைய நாளே,  வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது.