மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அவரின் லக்கேஜில் Bomb to Brisbane என்று எழுதியிருந்ததால் விமான நிலையத்தில் ஆஸி போலீஸ் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். லட்சுமியிடம் கேட்டதற்கு  `அது Bomb கிடையாது; Bombay என்னும் வார்த்தையின் சுருக்கம்’ என்றார் அப்பாவித்தனமாக.